/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 07, 2025 06:37 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணி வரவேற்றார்.
பேராசிரியர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சங்கத்தின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
திண்டிவனம் கல்வி மாவட்ட புதிய நிர்வாகிகளாக, தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் கோபு, பொருளாளர் நீலகண்டன், அமைப்பு செயலாளர் ரவி, துணைத் தலைவர் ராஜாராம், மகளிரணி பவானி.
விழுப்புரம் கல்வி மாவட்ட நிர்வாகிகளாக பழனி தலைவர், குமார் செயலாளர், ரவிச்சந்திரன் பொருளாளர், குமரவேல் அமைப்பு செயலாளர், மோகன்ராஜ் துணை தலைவர், முனியம்மாள் மகளிரணி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.