/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைமை ஆசிரியர்கள் சி.இ.ஓ.,விடம் வாழ்த்து
/
தலைமை ஆசிரியர்கள் சி.இ.ஓ.,விடம் வாழ்த்து
ADDED : ஜூலை 10, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திருச்சியில் நடந்த விழாவில் தமிழகத்தில், 2023--24ம் கல்வியாண்டிற்கான, அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இதில், விழுப்புரம் அடுத்த தொரவி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா, ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசன் மற்றும் சென்னகுணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாகிரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற தலைமை ஆசிரியர்கள், விழுப்புரம் சி.இ.ஒ., அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் வாழ்த்து பெற்றனர்.