/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை
/
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை
ADDED : அக் 28, 2025 06:19 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுகாதார ஆய்வாளர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணன், 38; விக்கிரவாண்டி பகுதியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி ராஜலட்சுமி. யுவன்கார்த்திக், 12; சக்தி, 8; ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் சரவணன், அவரது மகன்கள் மட்டுமே இருந்துள்ளனர். மாலை வீட்டு மாடியில் உள்ள அறைக்குச் சென்ற சரவணன், வெகுநேரமாக கீழே வரவில்லை.
மாலை 5:30 மணிக்கு அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, சரவணன் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.
கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சரவணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

