/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுகாதார ஆய்வாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார ஆய்வாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 29, 2025 04:58 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொது சுகாதார அலுவலர் சங்க தலைவர் ராஜாராம், ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், தலைவர் வெங்கடேஷ், பொருளாளர் சுடர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் சங்க தலைவர் ஞானசேகர், செயலாளர் தினேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சிவக்குமார், இணை செயலர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத்துறையில் 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளர் நிலை 1, துணை சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.