/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தன்னார்வலர்களுக்கு சுகாதார பயிற்சி
/
தன்னார்வலர்களுக்கு சுகாதார பயிற்சி
ADDED : ஜன 13, 2025 05:47 AM
செஞ்சி; செஞ்சி செக்கோவர் நிறுவனத்தில் மூன்று ஒன்றியங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு சுகாதார பயிற்சி முகாம் நடந்தது.
செஞ்சி செக்கோவர் நிறுவனத்தில் செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஒன்றியங்களை சேர்ந்த 125 தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை, சுகாதாரம், தன்சுத்தம் குறித்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு செக்கோவர் இயக்குநர் அம்பிகா சூசைராஜ் தலைமை தாங்கினார்.
மேல்மலையனூர் தாசில்தார் தனலட்சுமி, செஞ்சி பி.டி.ஓ., நடராஜன், இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், மேல்சித்தாமூர் வட்டார சுகாதார ஆய்வளர் ராமமூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பயிற்சியின் நிறைவாக தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை விழுப்புரம் கனிம வளத்துறை ஆய்வாளர் கண்ணன் வழங்கினார்.