/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
/
மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஆக 14, 2025 11:42 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி, மாவட்டத்தில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகள், மாவட்ட எல்லை பகுதிகள், இ.சி.ஆர்., மட்டுமின்றி ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியோடு வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்களில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதோடு, பிளாட்பாரங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தேச தலைவர்களின் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை யொட்டி, மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.