/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை மரக்காணத்தில் 11 செ.மீ.,பதிவு
/
விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை மரக்காணத்தில் 11 செ.மீ.,பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை மரக்காணத்தில் 11 செ.மீ.,பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை மரக்காணத்தில் 11 செ.மீ.,பதிவு
ADDED : நவ 28, 2024 07:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகளவாக மரக்காணத்தில் 11 செ.மீ., விழுப்புரத்தில் 6.6 செ.மீ., மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று காலை 9.00 மணி வரை தொடர்ந்து, பரவலாக பெய்தது. குறிப்பாக மரக்காணம், விழுப்புரம், வானுார் , வளவனுார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், மரக்காணத்தில் பல இடங்களில் மழை நீர் தேங்கி பாதித்தது. உப்பளங்கள் மூழ்கின. ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கியது. விழுப்புரத்திலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. எனினும், மழை நீர் வடிந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தொடர்ந்து, நேற்றும் மாலை வரை பரவலாக மழை பெய்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருவெண்ணைநல்லுாரியில் ஒரு வீட்டின் கூரை விழுந்து சேதமடைந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழை(மி.மீ): மரக்காணம் 111, விழுப்புரம் 66, வளவனூர் 50, வானூர் 57, கெடார் 40, கோலியனூர் 45, முண்டியம்பாக்கம் 47, சூரப்பட்டு 44, அரசூர் 36, திருவெண்ணைநல்லுார் 35, திண்டிவனம் 34, நேமூர் 23, கஞ்சனூர் 22, அனந்தபுரம் 16, செஞ்சி 15, வல்லம் 15, முகையூர் 15, மணம்பூண்டி 14, வளத்தி 10, செம்மேடு 9, அவலுார்பேட்டை 8. மொத்தம் 713 மி.மீட்டரும், சராசரி 34. மி.மீட்டரும் பெய்துள்ளது.