/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை
/
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை
ADDED : மார் 24, 2025 04:46 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடும் வெயிலுக்கிடையே, நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில், மார்ச் மாத தொடக்கத்திலிருந்து, பகல் நேரங்களில் வெய்யில் சுட்டெரித்து வருகிறது. 98 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வந்தது.
விழுப்புரத்தில் நேற்று காலை 9:00 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்கியது. தொடர்ந்து 11:00 மணிக்கு கடுமையான வெயில் சுட்டெரித்தது. திடீரென 12:00 மணிக்கு இருள் சூழ்ந்து மழை பெய்தது. தொடர்ந்து 1:15 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், முக்கிய சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
கடுமையான வெயில் தாக்கத்தில் தவித்த மக்கள், குளிர்ந்த சூழல் நிலவியதால் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போன்று, விக்கிரவாண்டி, வளவனுார், காணை, திருவெண்ணைநல்லுார் சுற்று வட்டார பகுதிகள் என மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.