/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நள்ளிரவில் பலத்த மழை செம்மேட்டில் அதிகபட்சமாக 105 மி.மீ., பதிவு
/
விழுப்புரத்தில் நள்ளிரவில் பலத்த மழை செம்மேட்டில் அதிகபட்சமாக 105 மி.மீ., பதிவு
விழுப்புரத்தில் நள்ளிரவில் பலத்த மழை செம்மேட்டில் அதிகபட்சமாக 105 மி.மீ., பதிவு
விழுப்புரத்தில் நள்ளிரவில் பலத்த மழை செம்மேட்டில் அதிகபட்சமாக 105 மி.மீ., பதிவு
ADDED : அக் 15, 2025 12:27 AM

விழுப்புரம் : மாவட்டத்தில் நள்ளிரவு பலத்த மழை பெய்ததால், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.
மாவட்டத்தில், கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரங்களில் விட்டு, விட்டு 'திடீர்' மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்தது. தொடர்ந்து அதிகாலை வரை மழை விட்டு, விட்டு பரவலாக பெய்தது.
இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் மழைநீர் தேங்கியது. செஞ்சி, வானுார், அவலுார்பேட்டை என மாவட்டம் முழுவதும், பரவலாக இந்த மழை பெய்தது.
இதையொட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. புதிய பஸ் நிலையம், ரயில்வே தரைபாலம், நகராட்சி பள்ளி மைதானம் போன்ற இடங்களில் தேங்கிய மழை நீர் நகராட்சி தரப்பில் அகற்றப்பட்டது.
ஆனால், பழைய பஸ் நிலையம் பின் பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி அப்படியே தேங்கி நிற்கிறது.
தொடர்மழை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி வருகிறது.
அங்குள்ள கடைகளுக்கு முன்பும், ஆட்டோ நிறுத்தம் பகுதியிலும் மழை நீர் சகதியாக தேங்கி நிற்பதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
செம்மேடில் 105 மி.மீ., மழை மாவட்டத்தில் மழையளவு (மி.மீ): விழுப்புரம், 56; கோலியனுார், 27; வளவனுார் 25; வானுார், 39; செஞ்சி, 12; செம்மேடு, 105; அவலுார்பேட்டை, 47; வளத்தி, 26; மணம்பூண்டி, 23; தி.வி.நல்லுார், 22; முகையூர், 10; அனந்தபுரம், 16; அரசூர், 8; மொத்தம், 425; சராசரி, 21.