/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்
/
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : நவ 02, 2025 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கூட்ரோட்டில் போக்குவரத்து போலீசார் சார்பில் நேற்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் பிரசாரம் நடந்தது.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமை தாங்கி ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
ெஹல்மெட் ஒருவரின் உயிருக்கான பாதுகாப்பு மட்டும் இல்லை. அது குடும்பத்திற்கான பாதுகாப்பு. எனவே, இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தானகிருஷ்ணன், முனியப்பன், பூவாத்தாள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

