ADDED : பிப் 01, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செஞ்சி வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் முன்னிலை வகித்தார்.
டி.எஸ்.பி., கவீனா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் சாலையில் துவங்கிய ஊர்வலம் திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை வழியாக மீண்டும் விழுப்புரம் சாலையில் முடிவடைந்தது.