/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : அக் 12, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி, சந்தை மேடு, குட்டைக்கரையைச் சேர்ந்தனர் ராஜேஷ், 35; இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவரது குடும்பத்திற்கு செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, வேட்டி சேலை, காய்கறிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., நகர பொருளாளர் நெடுஞ்செழியன், வார்டு கவுன்சிலர் அஞ்சலை, முன்னாள் கவுன்சிலர் சீனுவாசன், வார்டு செயலாளர்கள் பொற்கொடி, கோகுல்ராஜ், மகளிர் அணி பூவழகி உடனிருந்தனர்.