/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : ஜன 15, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வல்லம் அடுத்த இரும்புலி கிராமத்தில் தேவேந்திரன் - ஞானசவுந்திரி ஆகியோரின் கூரை வீடுகள் நேற்று முன்தினம் தீ பிடித்து எரிந்தது. இவர்களின் குடும்பத்திற்கு மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் அரிசி, பாத்திரங்கள் காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் கமலா, நிர்வாகிகள் கண்ணன், கன்னியப்பன், சேட்டு, கலைச்செல்வன், அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.