/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருப்பதி நடைபயண பக்தர்களுக்கு உதவி
/
திருப்பதி நடைபயண பக்தர்களுக்கு உதவி
ADDED : ஜன 23, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: நீலாம்பூண்டியில் திருப்பதி செல்லும் நடைபயண பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செஞ்சியிலிருந்து நடை பயணமாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் நேற்று நீலாம்பூண்டி வழியாக சென்றனர்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மோகன் நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்களை வரவேற்று, அவர்களுக்கு அரிசி மூட்டைகள், தண்ணீர்பாட்டில்கள், மோர், பிஸ்கட், வடை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.
இதில் வளத்தி முன்னாள் தலைவர் ரவிசங்கர், முன்னாள் வீட்டு வசதி சங்க இயக்குநர் தமிழரசி , சின்னதுரை, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

