/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு
/
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 24, 2025 10:04 PM

விழுப்புரம் : விழுப்புரம் கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், பாலங்களின் உள் பகுதியில் வளர்ந்துள்ள செடிகள், புதர்களை அகற்றி, மழைநீர் சீராக செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சா லையோர முட்செடிகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை வளைவில் உள்ள செடிகள், பட்டுப்போன மரங்கள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
விபத்து ஏற்படுத்தும் சாலை குழிகளை மூடுதல் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளும் நடக்கிறது.
பாலங்கள், சிறுபாலங்கள் ஆகியவற்றின் நீர் வரத்து பகுதிகளில் உள்ள செடிகள் முட்புதர்கள் அகற்றுதல், பாலத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க குழாய்களில் அடைத்துள்ள மண்ணை அகற்றுதல், இரவு நேர விபத்தை தடுக்க பாலங்களின் சுவர்களில் வெள்ளை அடித்தல் உள்ளிட்ட பணிகளை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை கோட்ட பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் ராதிகா ஆகியோர் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர்.