/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலைப் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
/
நெடுஞ்சாலைப் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 18, 2024 07:14 AM

மயிலம்: மயிலத்தில் நெடுஞ்சாலை பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
மயிலத்திலிருந்து தழுதாளி வரை நான்கு வழிச் சாலை பணிகள் பணிகள் நடந்து வருகிறது. மயிலம் பகுதியில் முழுமை பெறாத நிலையில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளையும் விரைந்த முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
மேலும் போலீஸ் ஸ்டேஷன், பாளைய வீதி அருகே நான்கு வழிச் சாலையில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் கவிதா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்தார்.
உடன் எம்.எல்.ஏ., மொபைல் போன் மூலம் சுகாதாரத் துறை உயரதிகாரிகளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதலாக ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க வழிவகை செய்தார்.
பின், அங்கிருந்து நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினார்.