/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடர் விபத்து நடக்கும் இடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு
/
தொடர் விபத்து நடக்கும் இடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு
தொடர் விபத்து நடக்கும் இடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு
தொடர் விபத்து நடக்கும் இடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு
ADDED : ஏப் 23, 2025 04:16 AM

திண்டிவனம் : திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கூட்ரோட்டில், நான்கு பக்கங்களிலிருந்து வாகனங்கள் வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகமாகி வந்தது.
தொடர் விபத்தை தடுக்கும் வகையில், கூட்ரோடு பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் பேரி கார்டு மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும். மயிலம் ரோட்டில் கூடுதலாக ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், திண்டிவனம் டவுன் போலீசார் சார்பில் முதல் கட்டமாக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் பேரி கார்டு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து நேற்று மாலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கவிதா மற்றும் போக்குவரத்து போலீசாருடன் கூட்ரோட்டில் விபத்து நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உதவி பொறியாளர் கூறுகையில், 'வரும் காலங்களில் கூட்ரோடு பகுதியில் விபத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்விற்கு பிறகு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

