/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ஹிந்தி தேர்வு நேர்முக வகுப்பு
/
விழுப்புரத்தில் ஹிந்தி தேர்வு நேர்முக வகுப்பு
ADDED : ஜன 30, 2024 06:43 AM

விழுப்புரம், : தக்ஷிண பாரத இந்தி பிரசார சபா மற்றும் விழுப்புரம் தகவல் மையம் சார்பில் ஹிந்தி நேர்முக வகுப்பு விழுப்புரத்தில் நடந்தது.
ஹிந்தி ஆரம்ப மற்றும் உயர்நிலை தேர்வுகள் வரும் பிப்ரவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கான நேர்முக வகுப்பு தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா மற்றும் விழுப்புரம் தகவல் மையம் சார்பில் விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனியில் உள்ள தி நியூ ஜான்டூயி மேல்நிலை பள்ளியில் நடந்தது.
இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த 50 ஹிந்தி ஆசிரியர்கள் பங்கேற்று, தேர்வுக்கு தயார் செய்யும் முறைகள், மதிப்பெண் பெறும் முறைகள் தொடர்பாக நேர்முக வகுப்பு நடத்தினர்.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த வகுப்புகளில் 280 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நேர்முக வகுப்பை தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா மற்றும் தகவல் மைய பொறுப்பாளர் ப்ரீத்தா கண்காணித்தார்.