/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேச்சு
/
தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேச்சு
தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேச்சு
தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேச்சு
ADDED : ஏப் 27, 2025 07:31 AM

விழுப்புரம் : 'காஷ்மீர், மேற்கு வங்கத்தைப்போல் பிரிவினைவாதத்தை துாண்டி, பயங்கரவாதத்தை ஆதரித்து, தமிழகத்தையும் மோசமான நிலைக்கு மாற்ற, இங்குள்ள கட்சியினர் துடிக்கின்றனர்' என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த இந்து மக்கள் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
காஷ்மீர், பஹல்காமில் நடந்த படுகொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்திலும் இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் இருந்து இந்துக்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்கிறது.
உலகளவில் முஸ்லிம்களுக்கு 30 நாடுகள் உள்ளன. இந்துக்களுக்கு தான் நாதியில்லை. பல முஸ்லிம் நாட்டு தலைவர்கள், காஷ்மீர் இந்தியாவுக்கானது தான் என, நமக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் உள்ள கட்சி தலைவர்கள், ஓட்டுக்காக எதிரி நாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
அரசியலுக்காக, இந்து, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை துாண்டி வருகின்றனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். முஸ்லிம், கிறிஸ்தவ மதம் ஒழிப்பு மாநாடு நடத்துவாரா. அற்ப அரசியலுக்காக பாகிஸ்தானுடன் போர் கூடாதென வலியுறுத்துகிறார்.
இவர்கள், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசுகின்றனர். அமித்ஷாவை பதவி விலக கூறும் திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 50 பேர் இறந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக கூறவில்லை.
இந்து மதம் குறித்து, அமைச்சர் பொன்முடியின் மோசமான பேச்சு கண்டிக்கத்தக்கது. அவர், பிற மதத்தை விமர்சித்து பேச முடியுமா. ஏன், அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.
நடிகர் விஜய் வீட்டிலிருந்தபடி அரசியல் செய்கிறார். தி.மு.க., சொல்வதை செய்துகொண்டு, தி.மு.க.,வின் 'ஏ' டீமாக விஜய் செயல்படுகிறார்.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது என மிரட்டியே, தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளை அடிமையாக்கி வருகிறது.
வி.சி.க., - கம்யூ., கட்சிகள், கொள்கையின்றி பணத்திற்காக ஆதரிக்கின்றனர். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, செந்தில்பாலாஜி, பன்னீர்செல்வம் போன்றவர்களின் முறைகேடு வழக்குகளால் தி.மு.க.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்டவர்கள், இந்துக்களை விமர்சிக்கின்றனர். தேர்தல் வந்தால் இவர்கள் கோவிலுக்கு வந்துவிடுவார்கள். தமிழ் தேசியத்தின் பெயரில் சீமான் மலிவான ஜாதி, மத அரசியல் செய்கிறார்.
காஷ்மீர், மேற்கு வங்கத்தைப் போல் பிரிவினை வாதத்தை துாண்டி, பயங்கரவாதத்தை ஆதரித்து, தமிழகத்தையும் மோசமான நிலைக்கு மாற்ற துடிக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் சாராய பலி, கொலை, கொள்ளை, முறைகேடுகள் என தொடர்வதால், ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நாட்டில் இந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் பேசினார்.

