/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
/
இந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 28, 2025 04:53 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாய்கமல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து வரவேற்றார். மாநில செயலாளர் செல்வம், மாநில தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில், மாநில அமைப்பு குழு தலைவர் பொன்னுசாமி, மகளிரணி பாரதி, மாநில செயலாளர் சித்ரா, இளைஞரணி கோபிநாத், மாணவரணி அருண்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் தேவராஜ்  உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் எழுச்சியுரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில், சிறந்த கல்வித்தந்தை விருது கல்வியாளர் சோழன், சிறந்த சமூக சேவை விருது செந்தில், ஆன்மிக சேவகர் விருது சித்ரா, செல்வம், சிறந்த சமூக சிந்தனையாளர் விருது திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  காஷ்மீர் படுகொலை சம்பவம், மேற்கு வங்கத்தில் இந்துக்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து பொதுக்கூட்டத்தில் பேசினர்.

