/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரலாற்று மாணவர்கள் மரபு நடைபயணம்
/
வரலாற்று மாணவர்கள் மரபு நடைபயணம்
ADDED : ஆக 27, 2025 06:38 AM

விழுப்புரம்: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடந்த மரபு நடை பயணத்தில், ஏராளமானமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம், இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் கள பயணம் சென்ற மாணவர் குழுவினர், பண்ருட்டி அருகே திருவதிகை, திருகண்டேஸ்வரம், எய்தனுார், திருமாணிக்குழி, திருவந்திபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில், பல்வேறு மாவட்ட வரலாறு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், ஆசிரியர் கமலக்கண்ணன் ஆகியோர் கோவில்களை பற்றியும், தேவாரம், பிரபந்தங்களில் சொல்லப்பட்ட செய்திகள்,கோவில் கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளில் உள்ள வரலாற்று தகவல்களை எடுத்துரைத்தனர்.
மேலும், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலை பல்லவர்கள் கட்டுவித்தது; கி.பி., 1313ல் கேரள மன்னர் வீரகேரள ரவிவர்ம குலசேகரன் கோவில் விமான அதிட்டானத்தை புதுப்பித்தது; திருகண்டேஸ்வரம் ஊர் வடுவூர் என்றும் அங்குள்ள நடனபாதேசுவரர் சுவாமியை சோழர்காலத்தில் திருவடுவூர்மஹாதேவர் என்றும் அழைக்கப்பட்டது; அதனருகே உள்ள எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது; உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அங்குள்ள கல்வெட்கள் கூறுகிறது.
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில், விக்ரமசோழன் ஆட்சி காலத்தில் சோழர்கள் தன் குலதெய்வமாக சிதம்பர நடராஜரை வழிபட்டனர் என்பதை கூறுகிறது.
அதே கோவில் இரண்டாம் குலோத்துங்கன் சோழன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் முடிசூடிய செய்தியாக 'தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய குலோத்துங்க சோழ தேவர்' என கல்வெட்டில் வருகிறது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் உள்ள வரலாற்று தகவல்களை கல்வெட்டுகள் கூறுவதையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.