டீசல் திருடிய ஹிட்டாச்சி ஆப்பரேட்டர் மீது வழக்கு
டீசல் திருடிய ஹிட்டாச்சி ஆப்பரேட்டர் மீது வழக்கு
ADDED : ஜூன் 04, 2026 09:47 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: டீசல் திருடிய ஹிட்டாச்சி ஆப்பரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த மேல்காரணையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 28; ஹிட்டாச்சி ஆப்பரேட்டர். இவர் கடந்த 6 மாதமாக விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தனியார் நிறுவனத்தில் ஹிட்டாச்சி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 31ம் தேதி 60 லிட்டர் டீசலை, ஸ்ரீகாந்த் திருடியுள்ளார்.
தனியார் நிறுவனத்தை சேர்ந்த அண்ணாமலை, 51; என்பவர் கொடுத்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் ஸ்ரீகாந்த் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
