/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்கள் பள்ளிக்கு விடுமுறை நீட்டிப்பு
/
பெண்கள் பள்ளிக்கு விடுமுறை நீட்டிப்பு
ADDED : டிச 09, 2024 05:27 AM

திருவெண்ணெய்நல்லுர் : திருவெண்ணெய்நல்லுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேல்நிலைப் மேல்நிலை பள்ளிக்கு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறு ஓரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வகுப்பறைகளில் சேறும் சகதியுமானது.
மேலும், மாணவர்கள் சான்றிதழ்கள், வருகை பதிவேடுகள், ஆய்வக உபகரணங்கள், பிரிண்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நாசமானது. கழிவறை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளது. ஆனால், திருவெண்ணெய்நல்லுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதிப்பு அதிகம் என்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெள்ளத்தால் இப்பள்ளி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிக அளவு பள்ளிக்குள் புகுந்ததால் அடித்தளம் ஊறி சில பகுதி விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பள்ளி நடத்த முடியாத சூழல் உள்ளதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 11 அல்லது 12ம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது மீதமுள்ள வகுப்புகள் அடுத்த வாரம் திறக்கப்படும்' என தெரிவித்தனர்.