/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் மாணவர்கள் ஆதரவு
/
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் மாணவர்கள் ஆதரவு
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் மாணவர்கள் ஆதரவு
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் மாணவர்கள் ஆதரவு
ADDED : பிப் 20, 2026 04:48 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு, நேற்று மாணவர்களும் ஆதரவளித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், அரசு கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 10:00 மணி முதல் பணிகளை புறக்கணித்து, கல்லுாரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் கிளை நிர்வாகி தயனேஸ்வரன் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு, ஆதரவாக, நேற்று மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

