/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
/
மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
ADDED : ஆக 11, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்:கோட்டக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி இறந்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் விக்ரம், 40; கோட்டக்குப்பம். கோவில் மேடு அருகே உள்ள ஓட்டலில் மாடியில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மது அருந்தினார்.
பின், மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுக்கச் சென்றபோது தவறி விழுந்தவர், அருகில் சென்ற மின் கம்பில் விழுந்தவர், மின்சாரம் தாக்கி விக்ரம் இறந்தார்.
புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.