sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது

/

ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது

ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது

ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது


ADDED : பிப் 12, 2024 06:48 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டவரிடம் தகராறு செய்து தாக்கிய சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில், நேற்று மாலை சென்னை வேளச்சேரி லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சத்தியராஜ், 33; தனது குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

அப்போது, பிரியாணிக்கு கூடுதலாக வெங்காயம் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கு வந்த ஓட்டல் உரிமையாளரான விழுப்புரம் மருதூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சூர்யா, 29; சத்தியராஜை தாக்கியுள்ளார். தடுத்த அவரது மனைவி சத்யாவை, 30; வையும் ஓட்டல் ஊழியர்கள் தாக்கி, மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டல் உரிமையாளர் சூர்யாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us