/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரம் அருகே வீடு புகுந்து ரூ.18 சவரன் நகை, பணம் கொள்ளை
/
கண்டாச்சிபுரம் அருகே வீடு புகுந்து ரூ.18 சவரன் நகை, பணம் கொள்ளை
கண்டாச்சிபுரம் அருகே வீடு புகுந்து ரூ.18 சவரன் நகை, பணம் கொள்ளை
கண்டாச்சிபுரம் அருகே வீடு புகுந்து ரூ.18 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : நவ 13, 2025 07:05 AM
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் 18 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி மனைவி சின்னத்தாய்,55; விவசாய கூலி தொழிலாளி. நேற்று காலை 10:00 மணிக்கு, சின்னத்தாயின் இரண்டு பிள்ளைகளும் வேலைக்கு சென்றனர். சின்னத்தாயி, வீட்டை பூட்டிவிட்டு, அருகே உள் ள தனது நிலத்திற்கு சென்றார். பகல் 12:00 மணிக்கு சின்னத்தாய் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இரண்டு பீரோக்களில் இருந்த 18 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.௧௫ லட்சம் ஆகும்.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி னர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வரு கின்றனர்.