/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு தேடி ரேஷன் பொருள் விழுப்புரத்தில் துவக்கம்
/
வீடு தேடி ரேஷன் பொருள் விழுப்புரத்தில் துவக்கம்
ADDED : ஆக 12, 2025 11:11 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுதேடி ரேஷன் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில், காணொளி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, 13வது வார்டு ஜி.ஆர்.பி., தெருவில் திட்டம் துவங்கப்பட்டது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு, ஊழியர்கள் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், குடிமை பொருள் தனி தாசில்தார் ஆனந்தன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் நவநீதம், சாந்தராஜ், புருஷோத்தமன், வார்டு செயலர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, தொண்டரணி கபாலி, தொழிலாளர் அணி ரமேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நெடுஞ்செழியன், அயலக அணி ஜனா, மோகன், செல்லதுரை, கதிரவன், செல்லதுரை, பழனி, சிலம்பு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.