/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு
/
வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே வீட்டு மனை தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அடுத்த தாதங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 60; அதே ஊரை சேர்ந்தவர் கனகசபை, 50; இவர்களுக்குள் வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
கடந்த 14ம் தேதி இரவு, இரு தரப்பினரும் தகராறு செய்து தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

