/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
/
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஆக 04, 2025 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : ஆடிப் பெருக்கையொட்டி, விழுப்புரம் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
ஆடிப் பெருக்கு நாளில், பொதுமக்கள் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், ஆடிப் பெருக்கு நெருங்கும்போது மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதும். அதன்படி, ஆடிப் பெருக்கு நாளான நேற்று மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், மீன் விலை அதிகரித்து காணப்பட்டது.