/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
செஞ்சியில் அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
செஞ்சியில் அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
செஞ்சியில் அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 10, 2024 04:10 AM

செஞ்சி: செஞ்சியில் அ.தி.மு.க., சார்பில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
செஞ்சி கூட்ரோட்டில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கோவிந்தசாமி, வல்லம் விநாயகமூர்த்தி, நடராஜன், மேல்மலையனுார் புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் அருண்தத்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
முன்னாள் துணை சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் மனோகர், சுலோச்சனா ஜெயபால், தகவல் தொழிநுட்ப அணி இணை செயலாளர் சத்தியராஜ், நகர அவைத்தலைவர் பசுபதி, பேரவை மாவட்ட துணை தலைவர் சரவணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.