/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு கணவன், மனைவி கைது
/
முன்விரோத தகராறு கணவன், மனைவி கைது
ADDED : ஜன 25, 2024 05:33 AM
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே தகராறு செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். மேல்மலையனுார் அடுத்த சீயப்பூண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, 32; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், 55; என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 19 ம்தேதி, காலையில் அண்ணாமலையை ஆறுமுகம் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
அன்று இரவு 7;00, மணிக்கு அவலுார்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக, சென்று கொண்டிருந்த அண்ணாமலை மற்றும் அவரது மனைவி காஞ்சனாவை, தாயனுார் ரோடில் வழிமறித்து, ஆறுமுகம், இவரது மனைவி வசந்தா, மகன் அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் 3 பேர் மீது வழக்குப் பதிந்து , ஆறுமுகம், வசந்தா, 45; ஆகியோரை கைது செய்தனர்.