/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை
/
விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 02, 2025 06:50 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 31; இவரது மனைவி கீர்த்திகா, 26; இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஆனால், குழந்தை இல்லை. இந்நிலையில், கோவிலுக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு, மரக்காணம் அருகே உள்ள முருக்கேரிக்கு வந்தனர்.
அங்குள்ள ஒரு மருந்து கடையில் விஷம் வாங்கிக்கொண்டு முருக்கேரி ஏரிக்கரையில் பார்த்திபன் மற்றும் கீர்த்தி ஆகியோர் விஷம் குடித்தனர்.
இதையடுத்து சிறுவாடியில் உள்ள தனது தாய் மாமா சதீஷூக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, இருவரும் விஷம் குடித்துவிட்டதாக கீர்த்தி கூறினார்.
உடனடியாக இருவரையும் மீட்டு சிறுவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு கீர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பார்த்திபன் இறந்தார்.
இருவரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.