ADDED : செப் 05, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்; கணவனின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த கணக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி,44; இவருக்கும் வேறொரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பழனியின் மனைவி ஜெயந்தி கணவரிடம் தட்டிக் கேட்டுள்ளார். கடந்த மாதம் 31 ஆம் தேதி கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து மீண்டும் ஜெயந்தி கேட்டபோது, பழனி மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு பழனியின் மகன் மற்றும் கள்ளக்காதலியும் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் பழனி, இவரது மகன் மற்றும் பழனியின் கள்ளக்காதலி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து பழனியை கைது செய்தனர்.