/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை
/
மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை
ADDED : மே 28, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 37; விழுப்புரம் மணிமேகலை தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வீட்டிற்கு தாமதமாக வந்தார். இதனை அவரது மனைவி அபர்ணாமேரி கண்டித்துள்ளார்.
இதனால் மன முடைந்த லட்சுமணன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.