/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை
/
குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை
ADDED : ஜன 15, 2024 06:19 AM
திண்டிவனம் : வெள்ளிமேடுபேட்டை அருகே தனியார் நிறுவன தொழிலாளி குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் சரண்ராஜ், 27; சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா, 24; இருவருக்குமிடையே நேற்று முன்தினம் மாலை குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த சரண்ராஜ் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன் அவரது சகோதரரர் சஞ்சய், 21; மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 25; ஆகியோர் மீட்டு, பைக்கில் அமர வைத்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியில் எதிரே கலப்பையுடன் வந்த டிராக்டரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சஞ்சய், சிவக்குமார் ஆகிய படுகாயமடைந்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரண்ராஜை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சஞ்சய், சிவக்குமார் ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.