ADDED : ஏப் 27, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்ச: சென்னைக்கு வேலைக்குச் சென்ற கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் காளிதாஸ், 55; கொத்தனார். இவர், அடிக்கடி சென்னைக்கு சென்று கொத்தனார் வேலை செய்து விட்டு, சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
கடந்த மாதம் 25ம் தேதி காலை 9:00  மணிக்கு சென்னை செல்வதாக கூறிச் சென்றவர் வீடுதிரும்பவில்லை. அவர் வேலை செய்த இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை.
அவரது மனைவி சின்னபாப்பா, 52; கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

