ADDED : ஜூலை 27, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், சுவேதா நகரை சேர்ந்தவர் மணி மகன் ஆனந்த்,37; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்த், மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி கனகவள்ளி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

