ADDED : பிப் 09, 2026 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: கணவரைக் காணவில்லை என போலீசில், மனைவி புகார் அளித்துள்ளார்.
செஞ்சி. பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; இவரது மனைவி வனஜா, 32; இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அதிகாலை 3:00 மணி முதல் மணிகண்டனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி வனஜா அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

