/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்
/
கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்
ADDED : அக் 27, 2024 03:50 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் 2வது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். கூலித் தொழிலாளி. மனைவி பாக்கியஜோதி, 25; காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக பாக்கியஜோதி கடந்த ஒரு மாதம் முன் அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அஜித்குமார், அவரது உறவுக்கார பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதாக பாக்கியஜோதி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார், உறவினர் ஆசைமூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.