ADDED : ஜூன் 30, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் கலிபுல்லா, 31; நகை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி, 25; காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 5 வயது மற்றும் 5 மாத குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற கலிபுல்லா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.