ADDED : ஜூலை 30, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கணவன் காணாமல் போனது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் ஜெகநாதன்,47; நகை செய்யும் தொழிலாளி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, சண்டையிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஜெகநாதனை அவரது மனைவி பரமேஸ்வரி திட்டினார். இதனால் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.