/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி
/
நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி
ADDED : செப் 22, 2024 02:41 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லுாரியில் சேராமல் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, உயர்கல்வி படிப்பதற்கு 'உயர்வுக்கு படி' எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். நிகழ்ச்சியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி, ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் உட்பட பலர் பங்கேற்றனர்.