/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முண்டியம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் உறுதி
/
முண்டியம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் உறுதி
முண்டியம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் உறுதி
முண்டியம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்: ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் உறுதி
ADDED : ஜன 05, 2024 12:30 AM

முண்டியம்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து தன்னிறைவு பெறச் செய்திடுவேன் என தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முண்டியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலுக்குட்பட்ட கிராமங்களில், விழுப்பரம் மாவட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் முண்டியம்பாக்கம் காலனி பகுதியில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை. 7.35 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை. 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில் முண்டியம்பாக்கம் குடிநீர் பைப் லைன்.
வடகுச்சிப்பாளையம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப் லைன். கைலாசநாதர் நகரில் 2.38 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் பைப் லைன். முண்டியம்பாக்கம் துவக்கப் பள்ளிக்கு 2.36 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி. உயர்நிலைப் பள்ளியில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சமையலறைக் கட்டடம் புனரமைத்தல். கிருஷ்ணர் கோவில் அருகே 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி டேங்க் பழுதுபார்த்தல் பணிகள் நடைபெற்றுள்ளன.
வடகுச்சிப்பாளையம் காலனி பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை. 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி. முண்டியம்பாக்கத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப் லைன் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
வரும் காலங்களில் ஒன்றிய கவுன்சிலுக்குட்பட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசிடம் இருந்து கேட்டு பெற்று செய்து இக்கவுன்சிலை தன்னிறைவு பெறச் செய்திடுவேன். இவ்வாறு ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால் கூறினார்.