/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடையஞ்சாவடி குறுக்கு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி
/
இடையஞ்சாவடி குறுக்கு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி
இடையஞ்சாவடி குறுக்கு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி
இடையஞ்சாவடி குறுக்கு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 24, 2025 04:42 AM

வானுார்: இடையஞ்சாவடி கிராமத்திற்கு செல்லும் குறுக்கு சாலை ஜல்லிகள் பெயர்ந்து, படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த இரும்பை ஊராட்சிக்குட்பட்ட இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு குதிரைப் பண்ணை வழியாக செல்லும் குறுக்கு சாலை உள்ளது.
2 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
ஆரோவில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த தார் சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து படு மோசமாக உள்ளது.
சாலையை புதுப்பித்து தரக்கோரி இடையஞ்சாவடி கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.