/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி தொடக்க விழா
/
அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி தொடக்க விழா
அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி தொடக்க விழா
அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி தொடக்க விழா
ADDED : நவ 11, 2024 05:45 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்வித்துறை மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி திட்ட தொடக்க விழா நடந்தது.
விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பொன்முடி, மகேஷ் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாணவர்களின் மல்லர் கம்ப சாகசம் நடந்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தொடக்க பள்ளிகளில், ஓடி விளையாடு பயற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளிகளுக்கு மல்லர் கம்ப உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழாவில், தமிழக மல்லர் கம்ப கழக உலகதுரை, விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி, கவுன்சிலர்கள் நவநீதம் மணிகண்டன், பிரியா பிரேம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பயிற்றுனர் செந்தமிழ் அன்பு நன்றி கூறினார்.