/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வைரபுரம்-திண்டிவனம் வரையிலான அரசு டவுன் பஸ் சேவை துவக்க விழா
/
வைரபுரம்-திண்டிவனம் வரையிலான அரசு டவுன் பஸ் சேவை துவக்க விழா
வைரபுரம்-திண்டிவனம் வரையிலான அரசு டவுன் பஸ் சேவை துவக்க விழா
வைரபுரம்-திண்டிவனம் வரையிலான அரசு டவுன் பஸ் சேவை துவக்க விழா
ADDED : டிச 08, 2024 05:05 AM

திண்டிவனம் : வைரபுரத்திலிருந்து திண்டிவனம் வரையிலான புதிய பஸ் சேவை துவக்க விழா நடந்தது.
திண்டிவனத்திலிருந்து அரசுகல்லுாரி வழியாக, வைரபுரம், அம்மணம்பாக்கம் வழியாக தாதபுரம் வரை சென்றுவந்த அரசு டவுன் பஸ் கடந்த ஆட்சியின் போது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டுமென போக்குவரத்துதுறை அமைச்சர் சிவங்கரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, வைரபுரத்தில், திண்டிவனம் வரை செல்லும் புதிய அரசு பஸ் சேவையை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் ராஜாராம், பஞ்சாயத்து தலைவர் பூமிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, திண்டிவனம் அரசு பணிமனை மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.