/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாட்டு நலப்பணித் திட்டம் அரசு பள்ளியில் துவக்க விழா
/
நாட்டு நலப்பணித் திட்டம் அரசு பள்ளியில் துவக்க விழா
நாட்டு நலப்பணித் திட்டம் அரசு பள்ளியில் துவக்க விழா
நாட்டு நலப்பணித் திட்டம் அரசு பள்ளியில் துவக்க விழா
ADDED : செப் 29, 2024 06:51 AM

மயிலம்: மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் என்.எஸ்.எஸ்., திட்ட துவக்க விழா நடந்தது.
கூட்டேரிப்பட்டு காந்தி கமலா நேரு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பாதிராபுலியூர் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார்.
கூட்டேரிப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் நீலகண்டன், உதவி தலைமை ஆசிரியர் சிவலிங்கம் ஆசிரியர்கள் தமிழரசி, விமலா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினர் மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் பேசுகையில், 'நாட்டு நலப்பணித் திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்து மரங்களை நடுவது, கோவில் வளாகங்களை சீரமைப்பது, விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது என பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். இவை எல்லாம் உங்களுக்கு ஒரு அனுபவ பாடமாக அமையும் எதிர்காலத்தில் நீங்கள் நல்லதொரு அரசு வேலைக்குச் செல்லும்போது அடித்தளமாக அமையும்' என்றார்.
மாணவர் பாலா நன்றி கூறினார்.