/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க கிளைகள் துவக்க விழா
/
பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க கிளைகள் துவக்க விழா
ADDED : ஏப் 29, 2025 04:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின், விக்கிரவாண்டி, மயிலம், ஒலக்கூர் ஒன்றிய புதிய வட்டார கிளைகள் துவக்க விழா நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். பொருளாளர் பாலரமணி முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ஞானசேகரன், புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமானம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, மாவட்ட துணை தலைவர் சசிதரன் வரவேற்றார். செயலாளர் ஜோஸ், துணை செயலாளர் ராஜேந்திரன், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வட்டார செயலாளர்களாக விக்கிரவாண்டி பிரபு, மயிலம் அருள்குமரன், ஒலக்கூர் சின்னராஜி பொறுப்பேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியத்தை நிறைவேற்ற காலதாமதம் செய்தால் போராட்டங்களை நடத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மகளிரணி பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

