/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் வணிக வளாக திறப்பு விழா
/
மேல்மலையனுாரில் வணிக வளாக திறப்பு விழா
ADDED : நவ 14, 2024 05:50 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் அறநிலைய துறை சார்பில் புதிய கடைகளை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மேல்மலையனுாரில் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் 1.97 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஹிந்து சமய அறநிலைய துறையின் சார்பில் கட்டப்பட்ட 35 புதிய வணிக வளாக கடைகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கலெக்டர் பழனி தலைமையில், எம்.எல்.ஏ., மஸ்தான் புதிய கடையில் குத்து விளக்கேற்றி வைத்தார்.
ஹிந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன், முன்னிலை வகித்தனர்.
மேல்மலையனுார் உதவி ஆணையர் ஜீவானந்தம் வரவேற்றார்.
இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் , மேலாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.